Monday, February 29, 2016

அவள் சொன்ன கதைகள்

இவையெல்லாம் தன்யா கடந்து இரண்டு நாட்களில் சொன்னக் கதைகள்.சிலக்கதைகள் நீண்டு இருக்கிறது , சில கதைகள் சட்டென்று முடிந்துவிடுகிறது.நீண்ட கதைகளில் பாடல்,ஆட்டம்,ஏகப்பட்ட நிகழ்வுகள் நிறைந்தது.அதை பதியமுடியவில்லை.அவளது குட்டிக்கதைகளை இங்கு முழுவதுமாகவும் , அதிகம் மாற்றம் இல்லாமலும் பதிய முயற்சித்திருக்கிறேன்.

கொசு கடிச்சிடிச்சு


தன்யாவை கொசு ஒன்னு கடிச்சிடிச்சு , இரத்தம் வேற வந்திடிச்சு.சிங்கமும் புலியும் வந்து "நாங்க கடிக்கல தன்யா.கொசு தான் கடிச்சிடிச்சு" அப்படின்னு சொன்னிச்சு.உடனே கொசுக்கு ஃபோன் பண்ணி "ஏன் தன்யாவை கடிச்ச?இனிமே கடிக்கக் கூடாது" என்று சொன்னாங்.அழுவாதே தன்யஸ்ரீ,உனக்கு ஒன்னுமில்லைன்னு டாக்டர்ஸ்லாம் சொன்னாங்க.அப்புறம் சரியாடிச்சு.


சூச்சு


ஒரு ஊர்ல மீன் இருந்துச்சாம்.அது படுக்கையில்(பெட்லையே) சூச்சு போச்சாம்.அவுங்க அம்மா வந்து சொன்னாங்களாம்.."இப்படி பெட்ல எல்லாம் போகக் கூடாது,toilet தான் போகனும்".அடுத்த தடவை சூச்சு வந்தப்போ அப்பாக்கிட்ட மீன் சொன்னுச்சாம்.அப்பா மீன் "wait பண்ணுமா." சொல்லிட்டு அம்மா மீனை கூப்பிட்டாங்களாம்.அம்மா மீன் வந்து கூட்டிட்டு போனாங்களாம்.கால் அலம்பிவிட்டு திரும்ப வந்துச்சாம்.


காக்கா கதை


ஒரு ஊர்ல காக்கா ஒன்னு இருந்துச்சாம்.அந்தக் காக்கா துப்புச்சாம்.உடனே அப்பா காக்கா வந்து கிள்ளிடிச்சாம்.அவுங்க அம்மா காக்கா.."இனிமே துப்பக் கூடாது,ப்ரஷ் பண்றப்ப மட்டும் தான் துப்பனும்னு சொன்னாங்களாம்"..அப்புறம் அந்தக் குட்டிக் காக்கா தூங்கிடிச்சாம்.கதை முடிஞ்சிடிச்சாம்.

1 comment: