Tuesday, February 4, 2014

வாமா மின்னல்..

சிலரது எழுத்துக்கள் நம்முடன் நெருங்கிவிடுகின்றன.அப்படி அடிக்கடி என்னுடன் நெருக்கத்தில் இருப்பது எஸ்.ரா வின் எழுத்துக்கள்.அவரது துணையெழுத்து,சிறிது வெளிச்சம்,தேசாந்திரி புத்தகங்கள் என்னுடன் எளிமையுடன் பேசுவதை உணர முடிகின்றது.அப்படி என்னுடன் தினம் பேசுவது வா.மணிகண்டனின் நிசப்தம் தளத்தின் எழுத்துக்கள்.பி.இ முடித்துவிட்டு மென்பொருள் துறையில் வேலை,பெங்களூரில் வசிக்கும் தமிழர்,தினம் 30-40 கி.மி பயணம்,நகரத்தின் cost of living பற்றினப் புரிதல் எனச் சில common factors.அவரது எழுத்துகளும் இந்த common factors களை பேசுவதால் அந்த நெருக்கம் ஏற்பட்டிருக்கலாம்.கடந்த ஒரு வருடமாக அவரது தளத்தைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன்,அதனால் அவரது லிண்ஷேலோகன் w/oமாரியப்பன் புத்தகத்தின் அறிவிப்பு என்னுள் எதிர்பார்பை ஏற்படுத்திவிட்டது.அந்த எதிர்பார்ப்பு எத்தனை சதவீதம் பூர்த்தியானது என்பதே இந்தப் பதிவு.

சிறு சிறு கதைகளாக 25 கதைகள் , ஒவ்வொரு கதைகளும் 2-3 பக்கங்களே.வாமா மின்னல்..என்பதை மனதில் வைத்துத் தான் மின்னல் கதைகள் என்று sub-title வைத்தாரோ என்னவோ..? கதை துவங்குவதும் , நம்மைக் கடந்து செல்வதும், முடிவதும் மின்னல் போல இருக்கிறது.இந்த மின்னல் கதைகள் வாசிப்புப் பழக்கம் இல்லாதவர்களுக்கும் படிக்க ஏதுவாக இருக்கும்.அப்போ வாசிப்புப் பழக்கம் இருக்கிறவர்களுக்கு எப்படி இருக்கும்னு நீங்க கேட்கிறது என் காதில் விழாமலில்லை

சிறுகதைகள் வாசிக்கும் போது ,அந்தக் கதாப்பாத்திரங்கள் நம்முடன் பயணிப்பது போன்ற அனுபவம் இதில் சற்று குறைவாக எனக்குத் தோன்றியது.எனது பள்ளி,கல்லூரி நினைவுகளை தூண்டியபோதும் அத்துடன் பயணம் செய்யப் போதுமான இடம் இல்லாது போலத் தோன்றியது.

படித்து முடித்த இரு தினங்கள் ஆகிறது ,தற்பொழுது நினைவில் இருக்கும் கதைகள் என்று சொல்வதை விட மனதைத் தொட்ட சில கதைகள் என்று சொன்னால் அவை சரோஜா,துலுக்கன்,நீதானே என் பொன் வசந்தம், லிண்ஷேலோகன் w/o மாரியப்பன்,காமத் துளி (இன்னும் இருக்கு..எனக்கு பிடித்த முதல் 5 மட்டும் இவை) போன்ற கதைகள்.என்னிடம் பெஸ்ட் ஆஃப் மின்னல் கதையைத் தேர்வு செய்யச் சொன்னால்,நான் தேர்வு செய்வது சில்க் ஸ்மிதாகதையாகத் தான் இருக்கும்.

2-3 கதைகள் சுவாரஸ்யமாக எனக்குத் தோன்றவில்லை.குறிப்பாக என்கவுண்டர் கதை.லூஸ் பால்ல ஏன் மனுஷன் 6 அடிக்காம விட்டாருன்னு தோனிச்சு.ஆனால் அதிகப்பட்சக் கதைகள் பட்டயைக் கிளப்பியது.அதுவும் கடைசிப் பத்துக் கதைகளில் எழுத்தின் முதிர்ச்சியை உணர முடிந்தது.

ஆகமொத்தம் எனது எதிர்பார்ப்பு 80 சதவிதம் பூர்த்தியானது என்று சொல்வேன்.

கடைசியாக: கதைகளின் தலைப்பை மட்டும் படிச்சுப் பாருங்க. ஏதோ பசங்களை மட்டும் டார்கெட் செய்வது போல இருக்கு.மணி சார் அப்படி ஏதாச்சும் யோசிச்சு வைச்சிங்களா..?


Disclaimer : இவை அனைத்தும் ஒரு வாசகனாக எனது கருத்து மட்டுமே.நீங்க இந்த புக்கை படிக்கும் போது முரன்படலாம்.(நிசப்தம் வாசகர் சங்கம்னு ஒன்னு இருக்காம்,அவுங்களுக்காக இது)


No comments:

Post a Comment