பொன்னியின் செல்வர் பிற்காலத்தில் இராஜராஜ சோழரி என்ற பெயருடன் சிங்காதனம் ஏறியபோது "ஈழத்து ராணி" என்று அவர் அழைத்த மந்தாகினி தேவிக்காக தஞ்சையில் ஒரு கோயில் எடுப்பித்தார்.அது சில காலம் "சிங்கள நாச்சியார் கோவில்" என்ற பெயருடன் பிரபலமாக விளங்கி வந்தது.நாளடைவில் அதன் பெயர் திரிந்து "சிங்காச்சியார் கோவில்" என்று ஆயிற்று.
என்று கல்கி பொன்னியின் செல்வன் 5ம் பகுதியில் சொல்லுகின்றார்.அவர் சாதரணமாக இதை சொல்லி இருந்தால் கூட எனக்கு ஒன்றும் தோன்றிருக்காது...
"இன்றைக்கும் தஞ்சை நகரின் ஒரு பகுதியில் சிங்காச்சியார் கோவில் என்ற பெயருடன் ஒரு சிறிய சிதிலமான கோவில் இருந்து வருவதைத் தஞ்சைக்கு செல்லுகிறவர்கள் விசாரித்துத் தெரிந்துக் கொள்ளலாம்."
என்று சொல்லி அந்த பத்தியை முடித்திருக்கிறார்.இந்த வரி நானும் தஞ்சையை சேர்ந்தவன் என்ற முறையில் ஒரு சின்ன உறுத்தலை ஏற்படுத்தியது...
நான் மும்பையில் இருக்கும் போது படித்ததால்..எனது ஆர்வத்தை சற்று silent mode ல் போட்டிருந்தேன்.பின்னர் பெங்களூர் பக்கம் வந்த பிறகு தான் தஞ்சை செல்லும் வாய்ப்பு அடிக்கடி கிடைத்தது.நானே தேடினேன் என்று சொல்வதை விட , நான் ஊர் சுற்றும் போது கடக்கும் கோயில்களின் பெயர்களை பார்த்துக் கொள்வேன்.அதுவரை கோயில் பெயர்களை படிக்கும் பழக்கம் எனக்கு இல்லை.
அப்பொழுது தான் குந்தவை நாச்சியார் கல்லூரி அருகே ஒரு கோயிலைப் பார்த்தேன் "செங்கமல நாச்சியார்" கோயில் என்றிருந்தது.அதுவரை நான் மனதில் நினைத்திருந்த கோயில் போல அல்ல அது.சரி எதற்கும் உள்ளே சென்று பார்த்தேன்.கோயில் பூசாரி இல்லாததால் உள்ளே இருந்த சாமியை பார்க்க முடியவில்லை.கோயினுள் கோழி,ஆடு எல்லாம் இருந்தது.நேந்துவிட்டது போல் இருந்தது.ராஜராஜ சோழன் தன் அன்னைப் போல் பாவித்த ஈழத்து ராணி கோயில் இப்படி இருக்காது எனவும் , இந்த கோயில் சமீக காலத்தில் கட்டப்பட்டிருக்கும் என என்ணி கிளம்பிவிட்டேன்.
காலம் சிறிது கடந்தது...facebook ல் தஞ்சைக்கென ஒரு க்ரூப் ..அங்கு கேட்டுப்பார்ப்போம் என ஒரு post போட்டேன்.அங்கும் தேவையான பதில்கள் கிடைக்கவில்லை...மீண்டும் 1 வருட காலம் கடந்தது.தஞ்சை க்ரூப்பில் தற்பொழுது பல தரப்பட்ட மக்கள் இருந்தனர்.மீண்டும் பதிவு செய்தேன்.நான் ஏறகனவே பார்த்த கோயில் தான் அது என சில நண்பர்கள் சொல்ல..இல்லை என நானும் மற்றும் சிலரும் சொல்ல...சரி நேரே சென்று பார்ப்பதென முடிவானது.இது போன்ற facebook முடிவுகள் facebook ஓடு முடிந்து விடும்.
அதில் இரு நண்பர்கள் எனது பள்ளி நண்பர்கள் என்பதாலோ என்னவோ இந்த முறை அப்படி முடியவில்லை...தஞ்சைக்கு சென்ற போது நண்பன் ஒருவனை "போய்வருவோமா" என்று கேட்க உடனே கிளம்பினோம்.மற்றொரு நண்பனையும் பிடித்துக் கொண்டு மூவரும் சென்றோம்...
கோயில் உள்ளே சென்றதும் , பூசாரி எங்களை பார்த்ததும் உள்ளே வந்து சாமிக்கு தீபம் காட்டினார்.சிறிய அம்மன் சிலைப் போல இருந்தது.கால மாற்றத்தில் கோயில் தனது அடையாளங்களை மாற்றிக் கொண்டது போலும்.சோழன் தனது அன்னைக்கு நிகரான ஒருவளுக்கு கட்டிய கோயில் என்று சொல்லும் எந்தவித அடையாளமும் இல்லை.தீபத்தை கண்ணில் ஒற்றிக் கொண்டிருந்தோம்...அப்போது நண்பன்.."கோயிலை பற்றி தெரிஞ்சக்கனும்னா யாருக்கிட கேட்கனும்"என்று பூசாரியிடம் கேட்க...அவரோ பொன்னியின் செல்வன்ல ஒரு குறிப்பு வரும் என பட்டென்று எனது சந்தேகத்தை தீர்த்தார்...
Click to see in Google maps
பிறகு நண்பர்களுடன் சில நேரம் கதைகள் பேசிவிட்டு வீட்டிற்கு வந்தேன்...எனது அன்னையிட கோயிலை பற்றி கேட்க வேண்டும் என்று தோன்றியது..காரணம் அம்மா படித்தது குந்தவை கல்லூரியில் தான்...ஆனால் அவர்களுக்கும் தெரியவில்லை.
கால மாற்றத்தில் எதையெல்லாம் மறந்திவிடுகிறோம்.நமது அடையாளங்கள் இவை.அதனை தெரிந்துக் கொண்டதிலும்,அதனை மற்றவர்களோடு பகிரும் போது ஒரு வித மகிழ்ச்சி , ராஜராஜ சோழன் இந்த கோயிலை கட்டி முடித்ததும் அவன் கொண்ட மகிழ்ச்சி.இரண்டும் ஒன்றோ..?
குறிப்பு : இதிலுள்ள தகவல்கள் ஏதேனும் தவறாக இருப்பின் தயவு செய்து தெரிவிக்கவும்