அலுவலகத்தில் dead end ல் நிற்க வைத்து க்ளைண்ட் கொடுக்கும் dead line அடிகள் , வீட்டில் ஒரு பக்கம் அம்மா ; மறுப்பக்கம் மனைவி என்று திடிரென விழும் sentimental அடிகள், மாதம் 10ம் தேதியானால் துவங்கும் பொருளாதார அடிகள் , சரி இதை மறக்கலாம் என்று சமூக வலைபக்கம் சென்றால் பிரபலங்களின் சண்டைகளிலும் , இலக்கியவாதிகளின் சண்டைகளிலும் முரண்பட்ட கருத்துக்களால் விழும் comment அடிகள்.விதவிதமான அடிகள் பதமாக விழுந்தாலும் சரி,திடமாக விழுந்தாலும் சரி... நானும் உங்களை போல தான் ; எவ்வளவு அடிச்சாலும் அமைதியாக வாங்கிக் கொண்டு ,விடுகதையா பாடலில் வரும் ரஜினி போல் சிரித்துக் கொள்வேன்.இங்கு நான் எழுத வந்தது இந்த கைப்புள்ள வாழ்வில் வாங்கும் அடிகளை பற்றியதல்ல,சிறுபிள்ளையாய் வெள்ளை சட்டையும் , சிகப்பு டவுசரும் போட்டுத் திரிந்த காலத்தின் போது வாங்கிய ஓர் அடியினை பற்றி.
அந்த பள்ளிப் பருவத்தில் ; தேர்வின் போது விளையாடுவது,விளையாட்டின் போது நண்பர்களுடன் சண்டை பிடிப்பது,ஆர்வ கோளாரில் ஏதாவது பொருளினை உடைத்து விடுவது என வீட்டில் அடிக்கடி அடி வாங்குவதற்கு இதில் ஏதாவது ஒன்று தான் காரணமாக இருக்கும்.அந்த அடிகளின் நினைவுகள் கூட; அப்பா ஆசையாக வாங்கி வரும் தின் பண்டங்களிலோ ,அம்மாவின் கொஞ்சலிலோ மறந்து போய்விடும்.ஆனால் இந்த பள்ளியில் தேவையில்லாமல் வாங்கிய அடி ...நினைவில் ஓர் ஓரத்தில் இருந்து கொண்டே இருக்கும் .அப்படிப்பட்ட ஓர் அடி எனக்கும் விழுந்திருந்தது...
4ம் வகுப்பு 'C' பிரிவில் படித்துக் கொண்டிருந்தேன்', காலாண்டுத் தேர்வு நடந்து கொண்டிருந்தது.ஆட்டோக்காரர் அன்று வராததால் ; சைக்களில் அப்பாவுடன் பள்ளிக்கு 8 மணிக்கே வந்துவிட்டேன்.9.30 மணி க்கு தான் தேர்வு.தேர்விற்காக வகுப்பறைகள் யாவும் ஒன்றாக்கப்பட்டிருந்தன.சீக்கரம் வந்ததால் அந்த பெரிய ஹாலில் நான் மட்டும் அமர்ந்திருந்தேன்.அந்தப் பள்ளியில் ஓர் அண்ணன் இருப்பார்,அவர் பெயர் நினைவில் இல்லை ஆனால் அவரது சிரிப்பு மட்டும் நினைவில் இருக்கிறது அது ரஜினியின் சிரிப்பை போல வசீகரமாக இருக்கும்.அவர் அந்த ஹாலின் வாசலில் நின்று கொண்டிருந்தார்.தேர்வுக்காக புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தேன்.அப்பொழுது 'D' பிரிவிலிருந்த ஓர் மாணவி அங்கு வந்தாள்.அவளைப் பார்த்தவுடன் ஒரு சின்ன புன்னகையுடன் ஏதோ பேச முயன்றேன்.
அவ்வளவு தான் நடந்தது...உடனே வாசலில் இருந்த அந்த அண்ணன் என் பெயரை குறித்துக் கொண்டார்.ஏன் என்று எனக்கு விளங்கவில்லை.தேர்வு ஆரம்பிக்கும் வரை ஹாலில் படிக்காமல் பேசுவோர்களை பிடித்துக் கொடுக்கும் உளவாளி அவர் என்பது பின்னர் தான் எனக்கு புரிந்தது.சரியாக 9 மணிக்கு என்னை "Big sir" அறைக்கு அழைத்துச் சென்றார்.அவரோட முகத்திலிருந்த அந்த வசீகரிப்பு காணாமல் போயிருந்தது.ரஜினி படங்களின் வரும் வில்லன்களாக அவர் தெரிந்தார்.
அந்த பள்ளியின் முதல்வர் Big Sir தான் , அவரை பார்க்கும் போதெல்லாம் சலாம் போடுவேன்.திங்கள் தோறும் நடக்கும் ப்ரேயர் முடிந்ததும் "GOD BLESS YOU" என்று அவரை கடக்கும் போது சொல்லுவார்.இதை தவிரஅவருக்கும் எனக்கும் எந்தவித பேச்சுகள் இருந்ததில்லை.அவரது அறைக்கு மாணவர்கள் அழைக்கப்பட்டால் அது அடிக்காக மட்டுமே.அவர் அடியை பற்றி அரசபுரசலாக கேள்விப்பட்டிருக்கேன்.ஆனால் அப்பொழுது தான் முதல் முறையாக அடி வாங்க அவரது அறைக்கு சென்றேன்.மனதிற்குள் அவரிடம் சமாளிக்க வசனங்களை தயார் செய்தேன்..அவரிடம் பேசினால் விட்டுவிடுவார் என்று நினைத்தேன்.அவருக்காக வாசலில் காத்திருந்தோம்.ஆம் அந்த உளவாளி வேறு இருவரையும் கடைசி நிமிடத்தில் பிடித்திருந்தார்(ன்).அறைக்குள் நுழைந்தார் Big Sir, முதல் ஆளை வரச் சொன்னார்..முதல் ஆள் வேறு யாரு..நான் தான்...
நான் கொஞ்சம் முகத்தை சோகமாக மாற்றிக் கொண்டேன்,மனதிற்குள் பயமும் இருந்தது."sorry sir.."என்று நான் ஆரம்பிக்க.அவரோ என் காதை திருகி , குணிய வைத்து மளாரென்று இரண்டு அடியை முதுகில் போட்டார்.எனக்கு ஏனோ கொஞ்சம் படபடத்தது.சுவாசிக்க சிரமமாக இருப்பது போல் தோன்றியது.என் முகத்தைக் கூட பாராமல் என்னை போக சொல்லிவிட்டு அடுத்தவனை உள்ளே அனுமதித்தார்.எதிரே வரும் அடுத்த மாணவனின் கண்கள் எனக்கு விழுந்த அடியின் சத்தத்தில் கலங்கியிருந்தது.வேறு யாரும் நான் அடி வாங்கியதை பார்க்காத போதும் எனக்கு ஏனோ அவமானமாக இருந்ததுஇது ஓரு சாதாரண நிகழ்வாக இருந்தாலும் எனக்கு விழுந்த அடி நியாயமற்றதாகவே தோன்றியது.தேர்வின் போது கூட அதை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன் , வெறுப்பின் உச்சம் என்று கூட சொல்லலாம்.அந்த தேர்வை சரியாக எழுதவில்லை.."ஒழுங்கா படிக்காததுக்கு இப்படி ஒரு பிட்டா" என்று நீங்கள் நினைத்தால் அதுக்கு நான் ஒன்றும் செய்ய முடியாது.
அதன் பிறகு அந்த அண்ணணையும்,Big Sir யும் கடக்கும் போதெல்லாம் வெறுப்பா இருக்கும். எனக்கு அந்த பள்ளியை சுத்தமாக பிடிக்காமலிருந்தது.அடுத்த வருடம் வேறு பள்ளிக்கு மாறிவிட்டேன்.மாறியதற்கு வேறு பல காரணங்களிருந்தாலும் , வாங்கிய அந்த அடியும் ஒரு முக்கிய காரணம்.நண்பர்களை விட்டு பிரியும் சோகத்தை விட , பள்ளியை விட்டு போவது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
இது தான் நான் வாங்கிய அந்த மரண அடி...அன்று எனக்கு பெரிய அவமாணமாக இருந்தது.அந்த அடிக்காக feel பண்ணது கொஞ்சம் அதிகபடின்னு இப்போ தோன்றினாலும் Big Sir ன் அடிகளில் நியாயம் ஏதும் இருப்பதாக எனக்கு இன்றும் தோன்றவில்லை.ஆசிரியரின் பார்வையிலே ஓர் அடி என்பது மிகச் சாதரணமாக இருக்கலாம் , ஆனால் ஒரு சிறுவர்வனின் பார்வையில் அது அவனுக்கு பயமும் , அவமானமும்.
அடிகள் தவறு செய்ததற்கு என்ற போது என் மனது (சிறுவனாக இருந்தபோதும்) அதனை ஏற்றுக் கொண்டது அதுவே தேவையில்லாத போது கசப்புணர்வாகவும் , சுற்றியுள்ளோர் மீது வெறுப்பாகவும் மாறியதை அன்று என்னால் தவிர்க்கவே முடியவில்லை.இன்றைய கால கட்டங்களில் பள்ளியில் யாரும் அடிப்பதில்லை என்று நினைக்கிறேன்.ஆனால் அதற்கு பதிலாக இது அது என்று பாடசுமைகள் அதிகமாக்கப் பட்டிருப்பதாக உணர்கிறேன்...தஞ்சையில் என் எதிர் வீட்டு சிறுமி U.K.G படிக்கிறாள்..ஓர் சனிக்கிழமையில் ..அவளிடம் .. பாப்பா வந்திருக்கா விளையாட வரியா என்று கேட்டதற்கு..tuition,special class இருக்கு என்கிறாள்...நான் அந்த வயதில் இந்த இரு வார்ததைகளையும் கேள்வி பட்டிருந்ததாகக் கூட ஞாபகமில்லை.
இப்படி நான் பள்ளி நினைவுகளை பகிர்வதற்கும் , பள்ளிகளை பற்றிப் பேசுவதற்கும் காரணம்..ஓர் வித்தியசமான பள்ளியை பற்றி தெரிந்துக் கொண்டதால் தான்...
அந்த பள்ளியை பற்றி .."ஜன்னலில் ஓர் சிறுமி" என்ற புத்தகத்தில் படித்தேன்.அதனால் தான் என் பள்ளியின் நினைவுகள் மீண்டும தலை தூக்கியது.சின்ன புத்தகம் தான்...கதையின் போக்கு அங்கு பயின்ற ஒர் சிறுமியின் பார்வையில்அமைந்திருக்கும்.சிறுமியின் பார்வையில் அந்த பள்ளியில் நடக்கும் நிகழ்வுகள் , அவளது பயணங்கள், வேற்பட்ட மனிதர்கள்,நண்பர்கள்,பேய் கதைகள் , வருமை என கதை பல இடங்களில் பயணிக்கும்.படிக்கும் போது குழந்தைகளாக நாம் செய்தது யாவும் நினைவில் வரும்.அதுமட்டுமில்லாது ,அடுத்த தலைமுறையின் வளர்ச்சியில் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருப்பதாகவும் தோன்றும்.சரி feelings ஜ இங்கேயே நிறுத்திட்டு கதைக்கு வருவோம்...
அந்தப் பள்ளியின் அமைப்பே வித்தியசமானது , ரயில் பெட்டிகளைக் கொண்டு வகுப்புறைகள் வடிவமைக்கப் பட்டிருக்கும்,மாணவர்கள் சுதந்திரமாக உலாவினர்.பொறுமையாக உண்டனர் இன்னும் பல அதிசிய நிகழ்வுகள்...அங்கு நடந்தது. அனைத்து விஷயங்களையும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனாலும் , அந்தப் பள்ளி மாணவர்களுக்காக எவ்வளவு நுண்ணியமாக ஒவ்வொரு விஷயங்களையும் அனுகியுள்ளதை நினைத்து வியக்காமல் இருக்க முடியாது.அந்த சிறுமி சின்ன சின்ன தவறுகள் செய்தபோதும் , முந்தைய பள்ளியிலிருந்து அவளை நிறுத்திய போதும் அந்த சிறுமியின் அன்னை ;தனது மகளின் தன்னம்பிக்கை கெடாமல் பாத்துக்கொள்வார்.(இங்கு ஓர் வருத்தமிருந்தது அப்பாக்களை out of focus லே வைத்திருப்பார்கள்).பள்ளியில் நடக்கும் எல்லா நிகழ்வுகளும் வீட்டிற்கு தெரிவிக்கப்படும் , அவை அனைத்தையும் புரிந்துக்கொள்ளும் ஆளாக அந்த சிறுமியின் அன்னையிருந்தாள்.
அந்த பள்ளியில் தினமும் அனைவரும் ஒன்றாக சேர்ந்து உண்பது வழக்கம்.முதல்வரும் தான்.முதல்வர் அவர்களைப் பார்த்து "கடலிருந்து கொஞ்சம் , மலையிலிருந்து கொஞ்சம்" எடுத்து வந்தீர்களா ? என்று கேட்பார்.ஒவ்வொருவரும் தங்களது உணவை பற்றி சொல்ல வேண்டும்.அது கடலிலிருந்து வந்ததா (அதாவது மீன் போன்ற கடல் உணவுகள்) இல்லை மலையிலிருந்து வந்த்தா(கிழங்கு வகைகள்) என்று சொல்ல வேண்டும்.குழந்தைகளுக்கு உணவை தெரியாத பட்சத்தில் முதல்வர் அந்த உணவைப் பற்றியும்,செய்த முறைப் பற்றியும் விவரிப்பார்.இது மாணவர்களுக்கு உணவின் மீது ஒரு ஈடுப்பாட்டினை உருவாக்கியது.உணவிற்கு பிறகு யார் முதல்வர் முதுகில் உப்பு மூட்டை ஏறுவதென பெரிய போட்டி இருக்குமாம்..இது ஒரு பக்கமிருக்க ; கதையின் மற்றொரு இடத்தில் , மாணவன் ஒருவன் பெற்றோர்களின் கட்டாயத்தால் பள்ளியை விட்டு வெளியேறுகிறான், அப்போ அவன் அந்த பள்ளியின் முதல்வர் முதுகில் ஏறிக்கொண்டு பெற்றோரிடம் செல்ல மறுக்கிறான்.
அதை பற்றி படித்த போது எனக்கு என் முதல்வர் என் முதுகை உரித்த கதை தான் ஞாபகம் வந்தது..(எப்படி முதுகை link கொடுத்து ரெண்டு கதையையும் sync பண்ணோம் பாத்தீங்கள..).அதன் விளைவு தான் இந்த போஸ்ட்...
ஒவ்வொரு பெற்றோரும் , ஆசிரியரும் படிக்க வேண்டிய புத்தகம் கண்டிப்பா படிங்க..அந்த சிறுமியின் பார்வையில் கதை நகரும் போது நமக்கும் பள்ளியின் நிகழ்வுகள் ஞாபகத்தில் வரும்.
இதை படித்த அந்த பள்ளியில் உடனே அடிமிஷன் கிடைக்குமானு கேட்காதீங்க...அந்த பள்ளி நமது நாட்டிலுமில்லை,நமது காலத்திலுமில்லை...ஜப்பானில் இரண்டாம் உலக யுத்தம் நடந்த போது அங்கிருந்த ஓர் பள்ளி அது...
இந்த புத்தகத்தை படித்த பிறகு எனக்கு ஏனோ taree zameen par பார்க்க தோனியது , தங்க மீன்கள் trailer பாக்கவும் வாய்ப்பு கிடைத்தது.இரண்டிலும் common ஆக ஒரு காட்சி இருந்தது .பள்ளி புத்தகத்தை அதீதமான வெறுப்பில் தூக்கி எறிவது போலவும்...தூக்கி எறிந்ததும் ஓர் முகமலர்ச்சி அடைவது போலவும் இருக்கும்...செம க்ளாஸா இருக்கும்...
Pdf in tamil : http://blog.balabharathi.net/wp-content/uploads/2012/10/totto-tamil.pdf
pdf in English : http://www.arvindguptatoys.com/arvindgupta/Tottochan.pdf
About Author : http://en.wikipedia.org/wiki/Tetsuko_Kuroyanagi

Good article. In every school, class there will be a spy. U mentioned as ULAVAALI. When i read that word, my thoughts went to my school days. :-)
ReplyDeleteMachi.. unala pesama iruka mudiyathu.... ana antha adi unna thiruthi blog yelutha vachuducha da....
ReplyDeleteஹாஹா .....வேறென்ன சொல்றது நல்ல பகிர்வு இதுக்காட பள்ளியை விட்டு சென்றாய்.....
ReplyDeleteசுவாரசியமான பதிவு ஜி .. மாணவர்கள் பலரும் வாங்கின சில அடிகளை இன்றும் மறக்காமல் இருப்பதுண்டு .. அந்த ஒரு அடி நினைவுக்கு வந்தது .. அந்தப் புத்தகத்தையும் தரவிறக்கி விட்டேன் .. சீக்கிரம் வாசிக்கிறேன் ..
ReplyDelete