1.வாரண்டி :
பொதுவாக hardware க்கு 1வருடம் , அதன் software க்கு 3மாதம் வாரண்டிக் கிடைக்கிறது.
2. OEM operating system
தற்பொழுது வரும் லாப்டாப்புக்கள் அதிகப்பட்சமாக OEM operating system கொண்டதாக இருக்கிறது.OEM என்றால் Original Equipment Manufacurer.நீங்கள் வாங்கிய லாப்டாப்புடன் முன்பைப் போல எந்த வித CD/DVD (retail operating system)யும் தற்பொழுது கிடையாது.operating system லாப்டாப்பிலே இருக்கும்.
3. OEM operating system பயன்கள்
விலை சிறிது குறைவாக இருக்கும்,மற்றப்படி இதனை அந்தந்த லாப்டாப்பின் மட்டுமே உபயோகிக்க முடியும்.இதனால் வேறு எந்த கணினியிலும் இதை உபயோகிக்க முடியாது.
4.செய்ய வேண்டிய முதல் வேலை
லாப்டாப் வாங்கியவுடன் முதலில் உங்கள் operating system க்கு recovery disk எடுத்து வைக்க வேண்டும்.நீங்கள் தனி டி.வி.டி யிலோ அல்லது pen drive யிலோ இதனை எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
5.எதற்காக recovery disk எடுக்க வேண்டும்
உங்கள் operating system பழுதானால் மீண்டும் உங்கள் கணினியில் operating system install செய்ய அதன் மூலம் மட்டுமே செய்ய முடியும்.
6.எடுக்காவிட்டால்..
எடுக்காவிட்டால் , நீங்கள் உங்கள் லாப்டாப் நிறுவனத்திற்கு தொடர்புக் கொண்டு அந்த recovery disk ஐ வாங்கிக் கொள்ளலாம்.3 மாதத்திற்குள் இருந்தால் இலவசமாக உங்கள் முகவரிக்கு அனுப்பி வைப்பார்கள்.இல்லையெனில் கட்டணம் செலுத்த வேண்டும் (2000 - 3000 செலவாகும்).குறிப்பு : எந்த ஊரில் வாங்கப்பட்டதோஅங்கே தான் அனுப்பி வைப்பார்கள்.
7.வெளிநாட்டில் லாப்டாப் வாங்கியிருந்தால்.
நீங்கள் வெளிநாட்டில் ஒரு லாப்டாப் வாங்கி, சிறிது மாதம கழித்து இந்தியாவிற்கு வந்துவிட்டீர்கள்.திடிரென உங்கள் லாப்டாப் பழுதாகவிட்டது.உங்கள் வாரண்டி இந்தியாவில் செல்லுமென்றால் உங்கள் hardware சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் இந்தியாவிலும் பார்க்கப்படும்.ஆனால் operating system போன்ற software சம்மந்தப்பட்ட எதுவும் இங்கு பார்க்கப்படாது.உங்களிடம் recovery disk இல்லாவிட்டால் , அது உங்களுக்கு அந்த நாட்டின் முகவரிக்கே அனுப்பி வைப்பார்கள்.அந்த நாட்டில் உங்கள் நண்பர்கள் இருக்கும் பட்சத்தில் , நண்பர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கச் சொல்லலாம்.அவ்வளவு தான் செய்ய முடியும் . இல்லையெனில் மீண்டும் 8000 - 10,000 செலவு செய்துத் தான் புதிதாக retail version operating system தான் வாங்க வேண்டும்.
குறிப்பு : உங்கள் hard disk பழுதாகிவிட்டால் , அவர்கள் அதனை மட்டுமே சரி செய்வார்கள்.நாம் தான் அவர்களுக்கு recovery disk கொடுக்க வேண்டும்.இல்லையெனில் நம் கதி அதோகதி தான்.
8. recovery disk வேலை செய்யவில்லை என்றால்..
அவர்கள் அனுப்பிய recovery disk வேலை செய்யவில்லை என்றால் , முடிந்த வரை அவர்களின் customer forum (இணையப்பக்கம்) உரையாடலில் தேடிப்பார்க்கவும்.அதில் உங்களுக்கு போதுமான உதவி கிடைக்கும்
customer care க்கு தொடர்பு கொண்டால் , உங்களது லாப்டாப்பை அவர்களிடம் கொடுக்க சொல்லுவார்கள்.அது வெளிநாட்டில் வாங்கியிருந்தாலும் கூச்சப்படாமல் மீண்டும் அந்த நாட்டிற்கே அனுப்பி வைக்கச் சொல்லுவார்கள்.
customer care ஐ தொடர்பு கொள்வதை விட , customer forum த்தில் உங்கள் பிரச்சனைகளை சொல்லுங்கள்,உங்களுக்கு போதுமான தீர்வு அங்கு கிடைத்துவிடும்.ஆனால் , கொஞ்சம் நிதானமாக தேட வேண்டும்.குறிப்பாக பொல்லாதவன் பட தனுஷ் போல விடாது இணையத்தில் அவர்களுடன் சண்டை பிடிக்க வேண்டும்.
[இங்கு கொடுக்கப்பட்டுள்ள விலை மட்டும் கால அவகாசங்கள் அனைத்தும் ஒரு தோரயமான மதிப்பே.]
Nanba apadiyay palaya computer vikuratgukum oru katurai yeluthu da
ReplyDelete