ஆசிரியர் : கல்கி
பக்கங்கள் : 4 பாகம்
ஒரு வரியில் : சரித்திர நாவல்,சுவாரசியமாக இருந்தது.
செலவிட்ட நேரம் : 5-6 மாதம் [என்னால் தொடர்ந்து படிக்க முடியாமல் போனதால்]
மீண்டும் கல்கியிடம் புத்தகம் மூலம் அறிமுகமாகிறேன் அதே கலத்தில்[சரித்திர நாவல்]...சில புத்தகங்கள் படிக்கும் போது அதன் சம்பந்தமான் நிகழ்வுகள் தானா நடக்கும்.அப்படி தான் போல நான் அஜந்தா,எல்லாரோ வை சுற்றி பார்த்தது.இந்த கதையின் முக்கிய அம்சமாக அஜந்தா வின் ஓவிய ரகசியம் இருந்தது.
பல்லவ காலத்தின கதை...அதுவும் முக்கியமாக மாமல்லபுரம் [Mahabalipuram] சிற்பங்களை மற்றும் சரித்திர போர் நிகழ்வுகளையும் மையமாக கொண்டவை...நான் சென்னையில் இருந்த 1.5 வருசத்தல .. ஒரே ஒரு தடவை தான் மாமல்லபுரம் போயிருக்கேன்.அதுவும் அந்த சிற்பங்களை எல்லாம் கவணிக்கவே இல்லை...ஆனால் இதை படிக்கும் போது , மாமல்லபுரம் சென்று நன்றாக சுற்றி பார்த்தேன்.
அஜந்தா , எல்லோரா.....
இந்த கதையில நம்ம பல்லவ ராஜாவின் முக்கிய எதிரி புலிகேசி தான்...புலிகேசியின் வாதாபியின் நகரத்தில் உள்ளவைதான் இந்த இடம்.
அஜந்தா , எல்லோரா சிலைகளுக்கும் , மாமல்லபுரத்தின் சிலைகளுக்கும் நிறைய ஒற்றுமை காணப்பட்டது.அதன் சில புகைப்பட்ங்கள் இங்கே......
இதை பற்றி எஸ்.ரா விடம் மின்னஞ்சலில் கேட்ட போது..
அன்பு பிரபு
உங்கள் மின்னஞ்சலுக்கு நன்றி
அஜந்தா குடைவரைக் கோவில் பாதிப்பில் உருவானது தான் மாமல்லபுர சிற்பங்கள்
ஆகவே நெருங்கிய தொடர்பு இருக்கவே செய்கிறது
மிக்க அன்புடன்
எஸ்ராமகிருஷ்ணன்
இது சம்மந்தமா வேறு புத்த்கம் இருக்கானு தெரில...தெர்ஞா சொல்லுங்க...சரி கதைக்கு வருவோம்..கதாபாத்திரங்கள் பற்றி சின்னதா ஒரு குறிப்பு...
பரஞ்சோதி தான் கதையை துவங்குவார்.அவருடைய போக்கில் கதை நகரும்.காஞ்சியில் அவருக்கு ஏற்படும் சிக்கல்கள் , அவர் செய்ய்ம் வீர தீர செயல்கள் அவரை பல்லவ தளபதியாக மாற்றும்.
ஆயனார் - இவருடைய கலை திறமை இன்றும் அவர் புகழ் பாடுகிறது.அவருடைய மகள் சிவகாமி.[இவளின் நடனம் தான் சிறப்பமாக மாறியது..பரதத்தின் அகராதி என கல்கி குறிப்பிடுகிறார்.
இளவரசர் , சிவகாமி காதல் வசம் படும் நிகழ்வு கல்கியின் எழுத்துகளில் நம்மை அழகாக கற்பனை செய்ய வைக்கும்.
புலிகேசி யின் படையெடுப்பு....கலை,காதல் வசமிருந்த கதையின் போக்கை முற்றிலும் மாற்றும்.போர் வராமல் இருவரும் சமாதானாம் அடைந்து புலிகேசி வாதாகபி திரும்பும் போது சிவகாமி கடத்த படுகிறாள்.இதுவே பல்லவனின் வீரத்தை கேள்வி குறியாக மாற்றுகிறது.புலிகேசியிடம் சிக்கி வாதாபியில் சில இன்னல்களை சந்திக்க்றாள்.அதற்கு பழி தீர்க்க சபதம் கொள்கிறாள்.
அந்த சிவகாமி சபதம் நிறைவேறியது எப்படி,புத்த பிஷு யார்..?ஆயனாரின் கலை சேவை,பல்லவனின் கலை ஆர்வம்,புலிகேசியின் வில்லதனம்,சிவகாமியின் மீது யார் கொண்டிருந்த காதல் வெற்றியடைகிறது போன்ற முக்கிய அம்சங்கள் கதை படிப்போரை எங்கும் நகரவிடாமல் வைத்திருக்கும்.
கண்டிப்பா நீங்களும் படிங்க...
very nice da
ReplyDeleteஇந்த புத்தகத்தில் உள்ள சில விசையங்கள் பார்த்திபன் கனவிலும் வரும். So it is better to read parthiban kanavu after finishing சிவகாமி சபதம்.நான் இந்த தவரை செய்தேன்.
ReplyDeletetnx da
ReplyDeleteyes abi read parthiban kanavu..i ll write in blog abt that very soooooon
ReplyDeleteகல்கியின் பேனா முனை பட்டு, கண்கள் கசிகின்றன.! நேற்றிரவு கனத்த இதயத்துடன் கடைசிப் பக்கத்தைக் கடந்தேன்.!! :(
ReplyDelete