புத்தகம் : மேலும் ஒரு குற்றம்...
ஆசிரியர் : சுஜாதா
பக்கங்கள் : 100 [குத்துமதிப்பா]
ஒரு வரியில் : படிக்கலாம்,சுவாரசியமாக இருந்தது.
செலவிட்ட நேரம் : 2 மணி நேரம்.
பெங்களூரில் தமிழ் புத்தகம் [நான் வசிக்கும் இடத்தின் அருகில்] கிடைப்பதில்லை.ITPL (http://www.parksquaremall.com/) Reliance time out ல் சுற்றும் போது , புத்தகங்களில் தமிழ் பிரிவு இருந்தது.அனைத்தும் சமையல் புத்தகங்கள் [தமிழ்நாடு நா சாப்பாடுனு முடிவு பண்ணிடாங்களோ ? ]. அதில் இரு புத்தகங்கள் மட்டும் , சமையல் புத்தகங்களோடு சேராமல் தனிமையில் தவித்து கொண்டிருந்தது.அதில் ஒன்று தான் இந்த புத்தகம்...
கதை சுவாரசியமாக இருந்தது.எந்த இடத்திலும் போர் அடிக்கவில்லை.4-5 கதாப்பாதிரங்கள் தான்...கொஞ்ச நாளா கலைஞர் டிவி யில் வரும் ராஜேஸ் குமார் நாவல் குறும்படம் பார்கிறேன்.இதுவும் அதே ஸ்டைலில் இருந்தது.முடிவு இப்படி தான் இருக்கும் என்று ஒரு யூகம் இருந்தது.அதை போல் முடிந்ததில் ஒரு சிறு வருத்தம்.கதை நடக்கும் இடம் பெங்களூர் அருகில் என்பதால் இடத்தை பற்றி அவர் சொல்லும் போது பிடித்திருந்தது.
குறிப்பு : இதில் வரும் கணேஷ்-வஸந்த் ... பல தொடர் கதைகளில் வருவார்களாம்..[நான் இதுவரை 2-3 சுஜாதா புக் தான் படிச்சிருக்கேன்..அதனால் என்னால் அதை பற்றின விஷயம் ஏதும் சொல்ல முடியவில்லை]
இரவு கொஞ்ச நேரம் படித்து , மறுநாள் படித்து முடித்து தான் மற்ற வேலையை துவங்கினேன்...
நீங்களும் படிச்சிட்டு சொல்லுங்க...
கொலையுதிர் காலம் படித்து பாருங்கள்....கணேஷ் வசந்த் கதாபத்திரங்களை வைத்து அருமையாக எழுதி இருப்பார்!
ReplyDeletetnx for info..i ll try to get tat book
Delete