Friday, September 30, 2016

கொழுக்கு முழுக்கு தக்காளி

பாடல்கள் சிறுவர்களை எளிதாக உற்சாகப்படுத்துகிறது , ஆனால் அவர்களுக்கு என்ன பாடல்களை தந்துக்கொண்டிருக்கிறோம்.சினிமா பாடல்களே அதிகம் அவர்கள் கேட்கின்றனர்.சினிமா பாடல்களை விட எளிதானது சிறுவர் பாடல்கள் , அது அவர்களுக்காகவே படைக்கப்பட்டது.இரண்டு மூன்று தடவைகளில் சிறுவர்கள் அதனை தங்களதாக்கிக் கொள்கின்றனர்.அவர்களுக்கு அறிமுகம் செய்வது மட்டுமே பெரியவர்களின் கடமை...

சமீபத்தில் பாவண்ணன் அவர்கள் எழுதி மீசைக்கார பூனை அட்டகாசமான பாடல்களின் தொகுப்பு.அதிலுள்ள ஒரு பாடல் தான் கொழுக்கு முழுக்கு தக்காளி

இது தான் தற்பொழுது எங்கள் வீட்டில் ஓடிக்கொண்டிருக்கும் பாடல்.வீட்டிலிருக்கும் தக்காளியெல்லாம் தற்பொழுது தரையில் உருண்டுக்கொண்டிருக்கிறது.ஏனென்று கேட்டால்..

"அப்பா..காலு முளைச்சிடிச்சு பா.." என்று உடனே பதில் வருகிறது...

இது தான் அந்தப் பாடல்...


கொழுக்கு முழுக்கு தக்காளிக்கு
கால் முளைத்ததாம்
கூடத்திலிருந்து வாசலுக்கு
துள்ளிக் குதித்ததாம்
துள்ளிக் குதித்த தக்காளி
தூணில் இடித்ததாம்
தூணிலிருந்து சுவரை நோக்கி
உருண்டு போனதாம்
சுவரில் மோதி மரத்தில் மோதி
அலைந்து களைத்ததாம்
சுருண்டு கிடந்த நாயின் காலில்
இடித்து நின்றதாம்
திரும்பிப் பார்த்த கருப்பு நாய்க்கு
கோபம் வந்ததாம்
தக்காளியைக் கவ்விக்கொண்டு
ஓடி விட்டதாம்


ஆடியோ வடிவில் ..இதோ இங்கே...

மகள் தன்யஸ்ரீ பாடியது : https://soundcloud.com/prabhu-rajendran-1/ibg9kg1nmxkl

நான் பாடியது : https://soundcloud.com/prabhu-rajendran-1/jmsbqp7kecei